சுருளி அருவி பற்றி தெரிஞ்சுக்கலாம் வாங்க


தேனி மாவட்டம் கம்பத்தில் இருந்து சுமார் 9 கிலோமீட்டர் தொலைவில் இந்த அழகான சுருளி நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள இந்த சுருளி அருவி இந்துக்களின் ஒரு புனித தளமாக போற்றப்படுகிறது.புண்ணிய தானம் என்று சொல்லப்படக்கூடிய நிகழ்வு அங்கே நடைபெற்று வருகிறது. சுருளி ஆண்டவர் என்று சொல்ல கூடிய முருகன் கோவில் இங்கு பிரசித்தி பெற்ற காரணத்தினால் இந்த இடத்திற்கு சுருளி அருவி என்று பெயர் வந்துள்ளது. இங்கு இமையகிரி சித்தர் என்று சொல்லக்கூடியவர் வெகு நாட்களாக இருந்ததாக தகவல்கள் மேலும் பெரும்பாலான சித்தர்கள் இங்கே இருந்ததாகவும் கூறப்படுகிறது.இறந்த நம் முன்னோர்களின் ஆத்மா சாந்தி அடைவதற்காக ராமேஸ்வரம் போன்ற இடங்களுக்கு செல்வது வழக்கம். அதே
போன்றதொரு முன்னோர்களுக்கு செய்யக்கூடிய வழக்கத்தை இந்த சுருளி அருவியில் பொதுமக்கள் நிறைவேற்றி வருகிறார்கள். பொதுவாகவே கம்பம் திராட்சைக்கு பேர் போன இடமாக உள்ளது. அந்த வகையில் சுருளி அருவிக்கு செல்லும் சாலையின் இரு புறங்களிலும் திராட்சைத் தோட்டங்கள் அதிக அளவில் காணப்படுகிறது. விதைகள் அற்ற வெள்ளை திராட்சைகளும் விதைகளுடன் கூடிய கருப்பு திராட்சைகளும் இங்கே பயிரிடப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகிறது. மற்ற இடங்களில் கிடைப்பதை காட்டிலும் இங்கே குறைவான விலையில் திராட்சை பழம் என்று சொல்லக்கூடிய முந்திரி பழம் கிடைக்கின்றது. சுற்றுலா பயணிகள் இந்த நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்காக பல்வேறு இடங்களில் இருந்து வருகை புரிகிறார்கள். நுழையும் இடத்தில் அங்கே சிறு சிறு கடைகள் மற்றும் உணவகம் காணப்படுகின்றன. அங்கே உணவு, வடைகள்,பணியாரம்,மாங்காய், பொறி மற்றும் விளையாட்டு பொருட்கள் போன்றவை விற்பனை செய்து வருகிறார்கள்.ஒரு சிறிய குற்றாலம் போல் காட்சியளிக்கும் இந்த சுருளி அருவியில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆனந்தமாக குளித்து மகிழ்ந்து வருகிறார்கள். நான்கு சக்கர வாகனத்திற்கு நுழைவு கட்டணமாக ரூபாய் 30 வசூலிக்கப்படுகிறது மேலும் அருவியில் குளிப்பதற்கு நுழைவு கட்டணமாக ஒருவருக்கு ரூபாய் 30 வசூலிக்கப்படுகிறது. சோப்பு மற்றும் ஷாம்பு போட்டு குளிக்க வனத்துறையினர் அனுமதிப்பது கிடையாது. பல வருடங்களாக இருக்கும் பெரிய பெரிய மரங்களை படிவமாக இங்கே காண முடியும். மேலும் சிறுவர்கள் விளையாடுவதற்கு ஏற்ற சிறு பூங்காவும் அங்கே அமைக்கப்பட்டுள்ளது. அருவியில் நன்றாக குளித்துவிட்டு கீழே உள்ள சுருளி ஆண்டவரை தரிசித்து விட்டு வருகிறார்கள் அங்கு வரும் சுற்றுலா பயணிகள். மேலும் ஒரு கிலோமீட்டர் தொலைவில் கோடிலிங்கம் என்று சொல்லக்கூடிய இடத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட லிங்கமானது  வைக்கப்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகள் இந்த கோவிலும் தரிசித்து விட்டு தான் செல்வார்கள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தேனி மாவட்டம் கும்பகரைய பத்தி பாக்கலாம் வாங்க

வராக நதிக்கரை ஓரம் சோத்து பாறை ஒரு பார்வை