வராக நதிக்கரை ஓரம் சோத்து பாறை ஒரு பார்வை

வராக நதிக்கரை ஓரம் ஒரே ஒரு பார்வை பார்த்தேன் என்று வராக நதி பற்றி சங்கமம் படத்தில் ஒரு பாடல் வருகிறது. அதன் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணை தான் சோத்துப்பாறை.

தேனியில் இருந்து சுமார் 23 கிலோமீட்டர் தொலைவிலும் வத்தலகுண்டுவில் இருந்து 18 கிலோமீட்டர் தொலைவிலும் இந்த சோத்துப்பாறை அமைந்துள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் அமைந்துள்ள இந்த அணையின் உயரமானது 187 அடியாகும்.2.288 ஏக்கர் சதவீதத்தில் இதனுடைய நீர்த்தேக்கம் அமைந்துள்ளது. அருகில் உள்ள பெரியகுளம் மற்றும் தாமரைக் குளம் வடுகபட்டி போன்ற பகுதிகளில் இந்த நீரினையே விவசாயத்திற்கு பயன்படுத்தி வருகிறார்கள். சோழர்கள் கட்டிய பெரிய கோவில் அதாவது பாலசுப்ரமணியன் கோவில் வழியாக இந்த அணையின் நீரான வராக நதி வருகின்றது. தமிழ்நாட்டில் உள்ள மிகப் பெரிய அணையின் வரிசையில் இரண்டாவதாக இந்த சோத்துப்பாறை அணையும் அமைந்துள்ளது.
சோத்துப்பாறை அணை செல்லும் வழியில் இரு புறங்களிலும் மாங்காய் தோட்டம் கண்களுக்கு எழில் கொஞ்சும் விதமாக அமைந்துள்ளது. காட்டு எருமைகள் அவ்வப்போது சாலை குறுக்கே நடந்து செல்வதை பார்க்க முடியும். பெரியகுளத்தில் இருந்து சுமார் 12 கிலோமீட்டர் தொலைவில் இந்த சோத்துப்பாறை அணை அமைந்துள்ளது. அங்கே சிறு சிறு கடைகள் உள்ளன. வனத்துறையினர் அமைத்துள்ள செக் போஸ்ட் வழியாகவே அனைத்து வாகனங்களும் அனுமதிக்கப்படுகிறது. போதை வஸ்துக்களை உள்ளே வனத்துறையினர் அனுமதிப்பது கிடையாது. மிக உயரமாக இருக்கும் இந்த அணையில் மழைக்காலங்களில் மட்டும் அணை நிரம்பி வழிவதை பார்க்க முடியும். சுற்றுலாப் பயணிகளை மிகவும் கவரக்கூடிய அணையாக இந்த சோத்துப்பாறை அணை அமைந்துள்ளது. அங்கு வாழக்கூடிய மலைவாசிகளிடமிருந்து உண்மையான இயற்கையான மலை தேன் வியாபாரம் செய்யப்பட்டு வருகிறது. அங்கு கிடைக்கக்கூடிய தேன் மிகவும் சுவையானதாக புளிப்பும் இனிப்பும் கலந்ததாக உள்ளது. குழந்தைகளுக்கு இந்த தேனை மருந்தாக கொடுக்கும் போது சளி காய்ச்சல் போன்ற பிரச்சனைகள் இருந்து விடுபட முடியும். அணையின் உட்பகுதியில் குளிப்பதை வனத்துறையினர் அனுமதிப்பது கிடையாது. வாகனங்களுக்கோ சுற்றுலாப் பயணிகளுக்கோ எந்த ஒரு தொகையும் அங்கே வசூலிப்பது இல்லை. தேனிக்கு சுற்றுலா வரும் பயணிகள் தோற்றுப் பாறையை பார்க்காமல் செல்வது கிடையாது. அப்படிப்பட்ட சோத்து பாறை அணையை நீங்களும் ஒரு முறையாவது பார்த்து ரசியுங்கள் என்று நம்முடைய தேதியில் பிளாக்ஸ்பாட் வளியாக கேட்டுக்கொள்கிறோம்..

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சுருளி அருவி பற்றி தெரிஞ்சுக்கலாம் வாங்க

தேனி மாவட்டம் கும்பகரைய பத்தி பாக்கலாம் வாங்க