நம்ம விஜயகாந்த் நடித்த கேப்டன் பிரபாகரன் கும்பக்கரை தங்கையா நான் கடவுள் போன்ற படங்கள் இங்கே எடுக்கப்பட்டுள்ளன.
யுனெஸ்கோ பாதுகாப்பில் அமைந்துள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில் தான் இந்த கும்பக்கரை அருவி அமைந்துள்ளது.
கொடைக்கானல் மலைப்பகுதியில் இருந்து இங்கே தண்ணீர் ஆர்ப்பரித்து வருகிறது.
மழைக்காலங்களில் அதிக தண்ணீர் வரத்து இருக்கின்றது. கோடை காலங்களில் குறைந்த தண்ணீர் வரத்து உள்ளது.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே சுமார் 7 கிலோமீட்டர் தொலைவில் இந்த அருவி அமைந்துள்ளது. கும்பக்கரை செல்லும் சாலையில் இரு புறங்களிலும் மாங்காய் தோட்டம் அதிக அளவில் உள்ளது.அதை பார்ப்பது இயற்கை எழில் கொஞ்சும்.காவல் தெய்வங்கள் கும்பலாக கூடும் இடம் என்பதால் இந்த பகுதியை கும்பகரை என்று அழைத்து வருகிறார்கள் அந்த ஊர் மக்கள்.ஒரு சில குறிப்பிட்ட நேரங்களில் மட்டும் பெரியகுளத்தில் இருந்து அரசு பேருந்து இயக்கப்படுகிறது. கும்பக்கரை அறிவிக்க முன்பாக ஒரே ஒரு கடை மட்டும் அமைந்துள்ளது. அங்கே சுக்கு காபிகள் வடைகள் மற்றும் வேக வைத்த பயிர்கள் கிடைக்கிறது. படிக்கட்டு வழியாக கீழே இறங்கிச் சென்றாள் அங்கே கல்லினால் ஆன முருகன் சிலை ஒன்று உள்ளது.

அருவியில் குளித்துவிட்டு பெண்கள் உடை மாற்றுவதற்கான இட வசதியும் அங்கே உள்ளது. யானை கஜம், வழுக்குப் பாறை, உரல் கஜம் என்று பல்வேறு நீர்வீழ்ச்சிகள் அங்கே இருக்கிறது. மையமாக இருக்கும் நீர்வீழ்ச்சியில் குளிப்பதை தவிர மற்ற இடங்கள் பெரும் ஆபத்தானவைகள் என்று அங்கே உள்ள வனத்துறை அதிகாரிகள் கூறுகிறார்கள். ஷாம்பு மற்றும் சோப்பு போட்டு குளிப்பதற்கு அங்கே தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பிளாஸ்டிக் பொருட்கள் அங்கே அனுமதியில்லை. பெரியவர்களுக்கு ரூபாய் பதினைந்து என்றும் சிறுவர்களுக்கு ரூபாய் 10 என்றும் இரு சக்கர வாகனத்திற்கு ரூபாய் 15 என்றும் நான்கு சக்கர வாகனத்திற்கு ரூபாய் 30 என்றும் வசூலிக்கப்படுகிறது. குரங்குகள் தொல்லை அங்கே அதிகமாக இருப்பதால் வாகனத்தில் எந்த ஒரு பொருட்களையும் வைத்துக் கொள்ளக் கூடாது என்று அறிவுறுத்தப்படுகிறது. சிறுவர்களுக்கு இந்த இடம் மிகவும் பிடித்தமான ஒன்றாக இருக்கிறது. தண்ணீர் அடியில் காலை வைத்துக் கொண்டால் அங்குள்ள மீன்கள் கால்களை மெல்லமாக கடித்து மருத்துவ உதவி செய்கிறது. கும்பக்கரை நீரானது எப்போதும் குளிர்ந்த தன்மையாகவே உள்ளது. கும்பக்கரையில் இருந்து பார்த்தோமேயானால் மேலே உள்ள கொடைக்கானல் மலைப்பகுதி அங்குள்ள டவர் ஆனது அழகாக தெரிகின்றது. தடைகளை மீறி ஆபத்தான பகுதிகளில் குளித்த சுற்றுலாப் பயணிகள் பெரும்பாலானோர் அங்கு இறந்து விட்டதாக தகவல்கள் உள்ளன. ஆகவே சுற்றுலா பயணிகள் தங்கள் குழந்தைகளையும் உறவினர்களையும் பாதுகாப்பாக இருக்கும் படி பார்த்துக் கொள்ள வேண்டும். நீர்வீழ்ச்சியில் குளித்துவிட்டு மீண்டும் மேலே வந்து ஒரு சுக்கு காப்பியை குடித்தால் மனதிற்கு இதமாகவும் இயற்கை ரசிக்கும் வண்ணமாகவும் இந்த கும்பக்கரை பகுதி இருக்கின்றது. அங்கே உணவகம் ஏதும் இல்லாத காரணத்தினால் சுற்றுலா பயணிகள் பெரியகுளம் மற்றும் வத்தலகுண்டு பகுதிகளில் உணவை வாங்கிக் கொண்டு சென்றால் இலகுவாக இருக்கும். மேலும் மது பாட்டில்கள் புகை பிடிப்பவர்கள் போன்றோர்களை வனத்துறை அதிகாரிகள் அனுமதிப்பது கிடையாது. எனவே இயற்கை எழில் கொஞ்சம் இந்த கும்பக்கரை பகுதியை மக்கள் ஒருமுறையாவது பார்த்து ரசிக்குமாறு நம்முடைய தேனியன் blogspot வழியாக உங்களைக் கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி
இவன் உங்கள் தேனியன்..
கருத்துகள்
கருத்துரையிடுக
உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி