இடுகைகள்

கும்பக்கரை அருவி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தேனி மாவட்டம் கும்பகரைய பத்தி பாக்கலாம் வாங்க

படம்
நம்ம விஜயகாந்த் நடித்த கேப்டன் பிரபாகரன் கும்பக்கரை தங்கையா நான் கடவுள் போன்ற படங்கள் இங்கே எடுக்கப்பட்டுள்ளன. யுனெஸ்கோ பாதுகாப்பில் அமைந்துள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில் தான் இந்த கும்பக்கரை அருவி அமைந்துள்ளது. கொடைக்கானல் மலைப்பகுதியில் இருந்து இங்கே தண்ணீர் ஆர்ப்பரித்து வருகிறது. மழைக்காலங்களில் அதிக தண்ணீர் வரத்து இருக்கின்றது. கோடை காலங்களில் குறைந்த தண்ணீர் வரத்து உள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே சுமார் 7 கிலோமீட்டர் தொலைவில் இந்த அருவி அமைந்துள்ளது. கும்பக்கரை செல்லும் சாலையில் இரு புறங்களிலும் மாங்காய் தோட்டம் அதிக அளவில் உள்ளது.அதை பார்ப்பது இயற்கை எழில் கொஞ்சும்.காவல் தெய்வங்கள் கும்பலாக கூடும் இடம் என்பதால் இந்த பகுதியை கும்பகரை என்று அழைத்து வருகிறார்கள் அந்த ஊர் மக்கள்.ஒரு சில குறிப்பிட்ட நேரங்களில் மட்டும் பெரியகுளத்தில் இருந்து அரசு பேருந்து இயக்கப்படுகிறது. கும்பக்கரை அறிவிக்க முன்பாக ஒரே ஒரு கடை மட்டும் அமைந்துள்ளது. அங்கே சுக்கு காபிகள் வடைகள் மற்றும் வேக வைத்த பயிர்கள் கிடைக்கிறது. படிக்கட்டு வழியாக கீழே இறங்கிச் சென்றாள் அங்கே கல்லினால் ஆன முருகன் சிலை ஒன்று உ...