இடுகைகள்

அணை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சுருளி அருவி பற்றி தெரிஞ்சுக்கலாம் வாங்க

படம்
தேனி மாவட்டம் கம்பத்தில் இருந்து சுமார் 9 கிலோமீட்டர் தொலைவில் இந்த அழகான சுருளி நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள இந்த சுருளி அருவி இந்துக்களின் ஒரு புனித தளமாக போற்றப்படுகிறது.புண்ணிய தானம் என்று சொல்லப்படக்கூடிய நிகழ்வு அங்கே நடைபெற்று வருகிறது. சுருளி ஆண்டவர் என்று சொல்ல கூடிய முருகன் கோவில் இங்கு பிரசித்தி பெற்ற காரணத்தினால் இந்த இடத்திற்கு சுருளி அருவி என்று பெயர் வந்துள்ளது. இங்கு இமையகிரி சித்தர் என்று சொல்லக்கூடியவர் வெகு நாட்களாக இருந்ததாக தகவல்கள் மேலும் பெரும்பாலான சித்தர்கள் இங்கே இருந்ததாகவும் கூறப்படுகிறது.இறந்த நம் முன்னோர்களின் ஆத்மா சாந்தி அடைவதற்காக ராமேஸ்வரம் போன்ற இடங்களுக்கு செல்வது வழக்கம். அதே போன்றதொரு முன்னோர்களுக்கு செய்யக்கூடிய வழக்கத்தை இந்த சுருளி அருவியில் பொதுமக்கள் நிறைவேற்றி வருகிறார்கள். பொதுவாகவே கம்பம் திராட்சைக்கு பேர் போன இடமாக உள்ளது. அந்த வகையில் சுருளி அருவிக்கு செல்லும் சாலையின் இரு புறங்களிலும் திராட்சைத் தோட்டங்கள் அதிக அளவில் காணப்படுகிறது. விதைகள் அற்ற வெள்ளை திராட்சைகளும் விதைகளுடன் கூடிய கருப்பு திராட்சைகளும்...

வராக நதிக்கரை ஓரம் சோத்து பாறை ஒரு பார்வை

படம்
வராக நதிக்கரை ஓரம் ஒரே ஒரு பார்வை பார்த்தேன் என்று வராக நதி பற்றி சங்கமம் படத்தில் ஒரு பாடல் வருகிறது. அதன் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணை  தான் சோத்துப்பாறை. தேனியில் இருந்து சுமார் 23 கிலோமீட்டர் தொலைவிலும் வத்தலகுண்டுவில் இருந்து 18 கிலோமீட்டர் தொலைவிலும் இந்த சோத்துப்பாறை அமைந்துள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் அமைந்துள்ள இந்த அணையின் உயரமானது 187 அடியாகும்.2.288 ஏக்கர் சதவீதத்தில் இதனுடைய நீர்த்தேக்கம் அமைந்துள்ளது. அருகில் உள்ள பெரியகுளம் மற்றும் தாமரைக் குளம் வடுகபட்டி போன்ற பகுதிகளில் இந்த நீரினையே விவசாயத்திற்கு பயன்படுத்தி வருகிறார்கள். சோழர்கள் கட்டிய பெரிய கோவில் அதாவது பாலசுப்ரமணியன் கோவில் வழியாக இந்த அணையின் நீரான வராக நதி வருகின்றது. தமிழ்நாட்டில் உள்ள மிகப் பெரிய அணையின் வரிசையில் இரண்டாவதாக இந்த சோத்துப்பாறை அணையும் அமைந்துள்ளது. சோத்துப்பாறை அணை செல்லும் வழியில் இரு புறங்களிலும் மாங்காய் தோட்டம் கண்களுக்கு எழில் கொஞ்சும் விதமாக அமைந்துள்ளது. காட்டு எருமைகள் அவ்வப்போது சாலை குறுக்கே நடந்து செல்வதை பார்க்க முடியும். பெரியகுளத்தில் இருந்து சுமார் 12 கிலோமீட்டர...