இடுகைகள்

சோத்து பாறை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வராக நதிக்கரை ஓரம் சோத்து பாறை ஒரு பார்வை

படம்
வராக நதிக்கரை ஓரம் ஒரே ஒரு பார்வை பார்த்தேன் என்று வராக நதி பற்றி சங்கமம் படத்தில் ஒரு பாடல் வருகிறது. அதன் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணை  தான் சோத்துப்பாறை. தேனியில் இருந்து சுமார் 23 கிலோமீட்டர் தொலைவிலும் வத்தலகுண்டுவில் இருந்து 18 கிலோமீட்டர் தொலைவிலும் இந்த சோத்துப்பாறை அமைந்துள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் அமைந்துள்ள இந்த அணையின் உயரமானது 187 அடியாகும்.2.288 ஏக்கர் சதவீதத்தில் இதனுடைய நீர்த்தேக்கம் அமைந்துள்ளது. அருகில் உள்ள பெரியகுளம் மற்றும் தாமரைக் குளம் வடுகபட்டி போன்ற பகுதிகளில் இந்த நீரினையே விவசாயத்திற்கு பயன்படுத்தி வருகிறார்கள். சோழர்கள் கட்டிய பெரிய கோவில் அதாவது பாலசுப்ரமணியன் கோவில் வழியாக இந்த அணையின் நீரான வராக நதி வருகின்றது. தமிழ்நாட்டில் உள்ள மிகப் பெரிய அணையின் வரிசையில் இரண்டாவதாக இந்த சோத்துப்பாறை அணையும் அமைந்துள்ளது. சோத்துப்பாறை அணை செல்லும் வழியில் இரு புறங்களிலும் மாங்காய் தோட்டம் கண்களுக்கு எழில் கொஞ்சும் விதமாக அமைந்துள்ளது. காட்டு எருமைகள் அவ்வப்போது சாலை குறுக்கே நடந்து செல்வதை பார்க்க முடியும். பெரியகுளத்தில் இருந்து சுமார் 12 கிலோமீட்டர...